கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கு கைதி தப்பியோட்டம்!
கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட கைதி ஒருவர் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் மல்லூர் அருகே பெண் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கில் நடைபெற்ற விசாரணையில் தடயங்களை சேகரித்த காவல்துறை நரேஷ்குமார் என்பவரை கைது செய்தது.
அவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து மருத்துவ பரிசோதனை நடத்தி சிறையில் அடைக்க காவல்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் கொரோனா வார்டில் இருந்து தப்பித்து சென்றதாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து தப்பியோடிய கைதியை பிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
newstm.in