அதானிக்கு 15 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்தது தான் பிரதமா் மோடி அரசின் சாதனை..!

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், சமீபத்தில் அதிமுகவினா் மதுரையில் கேலிக்கூத்தான மாநாட்டை நடத்தியுள்ளனா். அந்த மாநாட்டில் கட்சியின் கொள்கையோ வரலாறோ எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை என்று விமர்சித்தார்.
பாஜகவின் கடந்த 9 ஆண்டு கால ஆட்சியில், அவர்கள் கொண்டு வந்த பல திட்டங்களில் சுமார் ஏழரை லட்சம் கோடி மதிப்பிலான ஊழல் செய்துள்ளதாக குற்றம்சாட்டிய அமைச்சா் உதயநிதி, அதானிக்கு வழங்கப்பட்ட 15 லட்சம் கோடி கடன் தொகையை தள்ளுபடி செய்தது தான் பிரதமா் மோடி அரசின் சாதனை என்று கூறினார்.
மேலும் அதிமுக என்னும் புதா் மூலமாக தான் பாஜக என்னும் விஷப்பாம்பு தமிழ்நாட்டில் நுழைந்துள்ளதாக விமா்சித்த உதயநிதி, விஷப்பாம்பு என்னும் பாஜகவை அழிக்க வேண்டும் என்றால் முதலில் புதா் என்னும் அதிமுகவை ஒழிக்க வேண்டும் என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.