1. Home
  2. தமிழ்நாடு

பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 27-ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார்..!

Q

டெல்லியில் இரண்டு நாட்கள் நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற பிறகு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,
”இரண்டு நாட்கள் டெல்லியில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் இந்தியாவில் உள்ள 1700-க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இரண்டு முக்கிய தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. ஒன்று வளர்ச்சி அடைந்த பாரதம் 2047, இரண்டு எதிர்க்கட்சிகளின் சந்தர்ப்பவாத அரசியல். சிறப்பு தீர்மானமாக ராமர் கோயில் கட்டிட திறப்பிற்கு சம்பந்தப்பட்ட தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
27-ஆம் தேதி பிரதமர் மோடி ’என் மண், என் மக்கள்’ நடைபயண நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு வருகிறார். பிப்ரவரி 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகைக்கு எனது வாழ்த்துகள். தமிழக மக்கள் நலனுக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் நல்லது செய்யலாம். அரசியல் கட்சி வேறு பெயராக இருந்தாலும் அடிப்படை பணி ஒன்று தான். 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொண்டு, சப்பை கட்டு கட்டுவதற்காக EVM மூலமாக பிரதமர் மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார் என திருமாவளவன் குற்றம் சாட்டுகிறார்”, என அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்

Trending News

Latest News

You May Like