1. Home
  2. தமிழ்நாடு

பிரதமர் மோடி ஆறுதல்..! “வினேஷ் போகத் நீங்கள் இந்தியாவின் பெருமை”

1

2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்தம் 50 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற வினேஷ் போகத், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இதுவரை உலக மேடைகளில் யாராலும் தோற்கடிக்கப்படாத நம்பர் 1 வீராங்கனையான ஜப்பானின் யூ சுசாகியை எதிர்கொண்டு வரலாற்று வெற்றியை பெற்றார்.

இதனையடுத்து, காலிறுதிப்போட்டியில் காமன்வெல்த் போட்டிகளில் 3 முறை தங்கப்பதக்கம் வென்றவரான உக்ரைனின் ஒல்ஸானா லிவாச்சை எதிர்கொண்டு விளையாடினார் வினேஷ் போகத். அவரையும் தோற்கடித்து, அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.அரையிறுதிப்போட்டியில் கியூபாவின் யூஸ்னிலிஸ் குஸ்மானை எதிர்கொண்டார். இவர் அமெரிக்கன் கேம்ஸ் 2023-ல் தங்கப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரையும் வென்று வெற்றி வாகை சூடினார் வினேஷ் போகத்.

இந்நிலையில், இன்று இறுதிப்போட்டி தொடங்குவதற்கு முன்பது எடையை சோதனை செய்தபோது, தேவையான எடையை விட 150 கிராம் எடையை அதிகமாக இருந்துள்ளார். அதாவது 50 கிலோ 150 கிராம் இருந்துள்ளார் என சொல்லப்படுகிறது.

இருப்பினும், எடையை குறைக்க அவருக்கு வாய்ப்பளிக்குமாறு இந்தியத் தூதுக்குழு ஒலிம்பிக் சங்கத்துடன் வேண்டுகோள் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், வாய்ப்பு அளிக்கப்படாத சூழலில், தகுதி நீக்கம் செய்யப்பட்டார் வினேஷ் போகத்.

இந்நிலையில் வினேஷ் போகத் தகுதி நீக்கம் நிலையில், அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “வினேஷ், நீங்கள் சாம்பியன்களில் ஒரு சாம்பியன். நீங்கள் இந்தியாவின் பெருமை. அத்துடன் ஒவ்வொரு இந்தியருக்குமான உத்வேகம் நீங்கள். இன்றைய பின்னடைவு வேதனை அளிக்கிறது. நான் அனுபவிக்கும் விரக்தியின் உணர்வை வார்த்தைகளில் வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன். அதே சமயம், நீங்கள் மீண்டு வருவீர்கள் என்பதை நான் அறிவேன். சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்வது உங்கள் இயல்பு. வலுவாக திரும்பி வாருங்கள்! உங்களுக்கு நாங்கள் எல்லோரும் உறுதுணையாக இருக்கிறோம்” என பதிவிட்டுள்ளார்.


 

Trending News

Latest News

You May Like