1. Home
  2. தமிழ்நாடு

இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார் : இந்தியாவின் முதல் நீருக்கடியிலான சுரங்க மெட்ரோ ரெயில்..!

1

கொல்கத்தா மெட்ரோ ரெயில் நிர்வாகம் சார்பில் ஹவுரா மைதான் - எஸ்பிளானேட் மெட்ரோ வழித்தடத்தில் நாட்டிலேயே முதல் முறையாக நீருக்கடியிலான மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஹூக்ளி நதியில் 32 மீட்டர் ஆழத்தில் இதை உருவாக்கி உள்ளனர். சுமார் 520 மீட்டர் நீளத்திற்கு நதியின் கீழ இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

ஹூக்ளி ஆற்றின் கீழ் 520 மீட்டர் நீளத்தை 45 வினாடிகளில் மெட்ரோ ரெயில் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீருக்கடியில் அமைக்கப்பட்டுள்ள இந்த மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை, இந்தியாவின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நீருக்கடியிலான மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்க உள்ளார். 

ஹூக்ளி ஆற்றின் அடியில் 16.6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த மெட்ரோ சுரங்கப்பாதையானது பொறியியலின் குறிப்பிடத்தக்க சாதனையாகும். இந்த புதுமையான திட்டம் புதிய போக்குவரத்து முறையை வழங்குவதோடு மட்டுமல்லாமல், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் மற்றும் நகரத்தில் காற்று மாசுபாட்டைக் குறைக்கும்.

Trending News

Latest News

You May Like