1. Home
  2. தமிழ்நாடு

அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி..!

Q

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா நாடுகள் இணைந்து குவாட் என்ற அமைப்பை உருவாக்கியுள்ள்து. இந்தக் குவாட் அமைப்பின் மாநாடு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான குவாட் மாநாடு இன்று அமெரிக்காவில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் இன்று நடைபெறும் குவாட் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
இதனைத் தொடர்ந்து நாளை நியூயார்க்கில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் மோடி நாளை மறுதினம் ஐ.நா.சபையில் உரையாற்றுகிறார். இந்தப் பயணத்தின்போது பல்வேறு நாட்டு தலைவர்களைப் பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார்.

Trending News

Latest News

You May Like