1. Home
  2. தமிழ்நாடு

முதன் முறையாக பாட்காஸ்டில் பங்கேற்ற பிரதமர் மோடி..! நானும் ஒரு மனிதன் தான்...கடவுள் அல்ல...

1

பிரதமர் மோடி மன் கி பாத் வாயிலாக மாதத்திற்கு ஒரு முறை மக்களிடையே உரையாற்றி வந்தாலும் முதன்முறையாக அவர் பாட்காஸ்டில் கலந்து கொண்டு பேசி இருக்கிறார்.

 

ஜெரோதா இணை நிறுவனர் நிகில் காமத் தொகுத்து வழங்கும் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பல்வேறு விஷயங்கள் குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார். People by WTF என்ற தலைப்பில் நிகில் காமத் பாட்காஸ்ட் நிகழ்ச்சி நடத்தி வருகிறார். அதில் பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டு பேசி வருகின்றனர். இதன் 6ஆவது எபிசோடு People with The Prime Minister Narendra Modi என்ற பெயரில் ஒளிபரப்பாக இருக்கிறது.

 

நிகில் காமத் இந்த பாட்காஸ்டிற்கான டிரெய்லரை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். விரைவில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட இருக்கும் நிலையில் 2 நிமிடம் 13 வினாடிகள் கொண்ட டிரெய்லர் முதல் கட்டமாக வெளியிடப்பட்டுள்ளது. அதில் பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் பதவி குறித்தும், அரசியல் குறித்தும் மனம் திறந்து பேசி இருக்கிறார்.

குஜராத் முதலமைச்சர் ஆக தான் இருந்த காலகட்டத்தை நினைவு கூர்ந்திருக்கும் பிரதமர் மோடி "தவறுகள் தவிர்க்க முடியாதவை, நானும் நிறைய தவறுகள் செய்திருக்கலாம், நானும் ஒரு மனிதன் தான் கடவுள் அல்ல" என அதில் கூறுகிறார். இந்த டிரெய்லரின் தொடக்கத்தில் நிகில் காமத் "நான் இங்கே உங்கள் முன் அமர்ந்து பேசுகிறேன் நான் பதட்டமாக உணர்கிறேன் இது எனக்கு கடினமான உரையாடல் " என கூறுகிறார்.

அதற்கு புன்னகையோடு பதில் அளிக்கும் பிரதமர் மோடி "இது என்னுடைய முதல் பாட்காஸ்ட் இது உங்கள் பார்வையாளர்களிடம் எப்படி செல்லும் என எனக்கு தெரியவில்லை " என பதிலளிக்கிறார். இந்த டிரெய்லரை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவு செய்து "நாங்கள் உங்களுக்காக இதனை உருவாக்கி மகிழ்ந்ததைப் போலவே நீங்கள் அனைவரும் இதனை ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்" என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

சர்வதேச பிரச்சனைகள், அரசியலில் இளைஞர்களின் பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இந்த பாட் கேஸ்டில் பேசியிருப்பதாக தெரிகிறது. குறிப்பாக அரசியல்வாதிகளாக விரும்பும் நபர்கள் ஒரு குறிக்கோளுடன் வர வேண்டும், லட்சியத்துடன் அல்ல நல்லவர்கள் தொடர்ந்து அரசியலுக்கு வர வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.


 


 

Trending News

Latest News

You May Like