தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி..!

தமிழகத்திற்கு வரும் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி வருகிறார். ராமேஸ்வரம் கடல் பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய பாம்பன் ரயில் பாலத்தின் முதல் வழித்தடத்தைத் தொடங்கி வைக்கவுள்ளார். அத்துடன், தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் அமையவிருக்கும், இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்திற்கான அடிக்கலும் நாட்டவுள்ளார்.
பாம்பனில் உள்ள ரயில் பாலம் நூற்றாண்டைக் கடந்த நிலையில், 520 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2019- ஆம் ஆண்டு மார்ச் 1- ஆம் தேதி அடிக்கல் நாட்டினார்.
எனினும், தமிழகம் வருகை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிரதமர் அலுவலகம் இன்னும் வெளியிடவில்லை.