1. Home
  2. தமிழ்நாடு

நிவாரணத் தொகை எதையும் கொடுக்காமல் வெறும் கையால் முழம் போடுகிறார் பிரதமர் - முரசொலி..!

Q

குஜராத்தில் வெள்ளம் ஏற்பட்டதும் அன்றைய தினமே அங்கு போய் பார்க்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. ஒரு மாதம் கழித்து தமிழ்நாட்டிற்கு வந்த போதும் வெள்ளம் பாதித்த பகுதி மக்களைப் பார்க்கவில்லை. குஜராத்துக்கான நிதியை வெள்ளம் ஏற்பட்ட அன்றைய தினமே பிரதமர் நரேந்திர மோடி அறிவிக்கிறார். தமிழ்நாடு ஒரு மாதமாக தட்டேந்தி நிற்பது பிரதமர் கண்ணுக்குத் தெரியவில்லை.

பேரிடர் நிவாரணத் தொகையைக் கொடுக்க மனமில்லை; அதனால் மத்திய அரசு கொடுக்கவில்லை” என்று கடுமையாக முரசொலி நாளிதழ் விமர்சித்துள்ளது.

இது­வரை முத­லில் 450 கோடி ரூபா­யும், பின்­னர் 450 கோடி ரூபா­யும் ஒன்­றிய அர­சி­டம் இருந்து தரப்­பட்­டது. இது­வும் வழக்­க­மாக வரும் நிதி தானே தவிர, இப்­போது ஏற்­பட்ட புயல் --- மழை -- வெள்­ளச் சேதங்­க­ளில் இருந்து மீட்­கத் தரப்­பட்ட சிறப்பு நிதி அல்ல.

இயற்­கைப் பேரி­டர்­க­ளால் ஏற்­ப­டும் செல­வு­களை சமா­ளிப்­ப­தற்­காக ஒவ்­வொரு மாநி­லத்­திற்­கும் மாநி­லப் பேரி­டர் நிவா­ரண நிதி (SDRF) என்ற நிதி உள்­ளது. எந்­தெந்த மாநி­லத்­திற்குஇந்த நிதி எவ்­வ­ளவு என்­பதை ஐந்­தாண்டு காலத்­திற்கு ஒரு­முறை ஒன்­றிய அர­சால் நிய­மிக்­கப்­ப­டும் நிதிக் குழு (Finance Commission) தீர்­மா­னிக்­கி­றது. இதன்­படி, தமிழ்­நாட்­டி­னு­டைய SDRF--க்கு ஒவ்­வொரு ஆண்­டும் ஒதுக்­கப்­பட்­டுள்ள நிதி 1,200 கோடி ரூபாய் ஆகும். இதில் 75 விழுக்­காட்டை, அதா­வது 900 கோடி ரூபாயை ஒன்­றிய அரசு தர­வேண்­டும். 25 விழுக்­காட்டை, அதா­வது 300 கோடி ரூபாயை தமிழ்­நாடு அரசு ஏற்­றி­ட­வேண்­டும்

ஒன்றிய அரசிடமிருந்து நமக்கு வந்த 900 கோடி ரூபாய் நிதி என்பது இந்த ஆண்டு நமது SDRFக்கு ஒன்றிய அரசு அளிக்க வேண்டிய தவணை தானே தவிர, கூடுதல் நிதி அல்ல.

ஒன்­றிய அர­சி­டம் பேரி­டர் நிவா­ர­ணத் தொகை­யாக 68 ஆயி­ரம் கோடி ரூபாய் நிதி இருக்­கி­றது. அதில் இருந்து தான் கேட்­கி­றோம். கொடுக்க மன­மில்லை. அத­னால் அவர்­கள் கொடுக்­க­வில்லை.

ஆனால், 'காங்­கி­ரஸ் ஆட்­சியை விட இரண்­டரை மடங்கு அதி­க­மாக பா.ஜ.க. அரசு தமிழ்­நாட்­டுக்கு நிதி கொடுத்­த­தாக' திருச்சி கூட்­டத்­தில் பிர­த­மர் பேசி பேசியுள்ளார்

Trending News

Latest News

You May Like