திருக்குறளை முன் நிறுத்தி ,தமிழில் டுவிட் செய்த பிரதமர் மோடி !!

திருக்குறளை முன் நிறுத்தி ,தமிழில் டுவிட் செய்த பிரதமர் மோடி !!

திருக்குறளை முன் நிறுத்தி ,தமிழில் டுவிட் செய்த பிரதமர் மோடி !!
X

பிரதமர் மோடி அரசியல் கூட்டங்களிலோ அல்லது மாணவ, மாணவர்களுடனான கலந்துரையாடலின் போதோ, தமிழ் இலக்கிய நூல்களின் வரிகளை சொல்லி அவ்வப்போது தமிழக மக்களை கவருவார்.

அந்த வகையில், சுமார் 2000 ஆண்டுகள் பழமையான நூலான கருதப்படும் திருக்குறளின் பெருமையை புகழ்ந்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில் , திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூலாகும். உயரிய சிந்தனைகள், உன்னதக் குறிக்கோள்கள், ஊக்கம் தரும் கருத்துக்களை உள்ளடக்கிய பொக்கிஷமாகும்.

தெய்வப்புலவர் திருவள்ளுவரின் எழுத்துக்கள், நம்பிக்கையும் ஒளியும் பரப்பிடும் வல்லமை வாய்ந்தவை. இந்தியா முழுதிலுமுள்ள இளைஞர்கள் பலரும் திருக்குறளைப் படித்துப் பயனுருவர் என நம்புகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். தனது டுவிட்டர் பதிவுடன் சில மேடைகளில் தான் பேசிய தமிழ் இலக்கிய வரிகளை வெளியிட்டுள்ள செய்தித்தாளின் நகலையும் இணைத்துள்ளார்.

Newstm.in

Next Story
Share it