தொடக்கப் பள்ளிகள் நவம்பர் 10ம் தேதி வரை மூடப்படும் - அமைச்சர் அதிஷி அறிவிப்பு..!
டில்லியின் காற்றுத் தரக் குறியீடு 351 புள்ளிகளாக பதிவாகி இருந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலையில் அது 471ஆக உயர்ந்தது. டில்லியில் பெரும்பாலான பகுதியில் காற்றின் தரக்குறியீடு 400 புள்ளிகளைக் கடந்து பதிவாகி உள்ள நிலையில் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.அடுத்த 15 முதல் 20 நாள்களுக்கு காற்று மாசு கவலைக் குரிய வகையில் இருக்கும் என டில்லி சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது
இதற்கிடையே, காற்றின் தரம் மோசமானதை அடுத்து டில்லியில் உள்ள தொடக்கப் பள்ளிகள் நவம்பர் 10ம் தேதி வரை மூடப்படும்.. மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு 6 முதல் 12 வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்தப்படும் என டெல்லி கல்வி அமைச்சர் அதிஷி அறிவித்துள்ளார் . சிறார்களின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அறிவித்தார்.
இந்நிலையில், டெல்லி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அத்தியாவசியமற்ற கட்டுமான நடவடிக்கைகளுக்கு மத்திய மாசுக் கட்டுப்பாட்டுக்குழு தடை விதித்துள்ளது.
டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நெஞ்சு வலி, சுவாசக்கோளாறுகள், கடுமையான இருமல்கள் காரணமான சிகிச்சை பெற்று வருகின்றனர்.