1. Home
  2. தமிழ்நாடு

இன்று முதல் 800 அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்கிறது..!

1

ஆன்டிபயாடிக், பெயின்கில்லர் போன்ற அத்தியாவசிய மருந்துகளின் விலை, இன்று முதல் சிறிதளவு உயரும் என, என்.பி.பி.ஏ., எனும் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.மொத்த விலை குறியீட்டின் ஆண்டு மாற்றத்திற்கு ஏற்ப, தேசிய பட்டியலின் கீழ் உள்ள அத்தியாவசிய மருந்துகளுக்கு, 0.0055 சதவீதம் விலை மாற்றம் செய்யப்படும், என ஆணையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, பாராசிட்டாமல், அசித்ரோமைசின், வைட்டமின், மினரல்ஸ் உள்ளிட்ட 800க்கும் மேற்பட்ட மருந்துகள், இந்த புதிய விலையின் கீழ் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக, மருந்துகளின் விலை கடந்த ஆண்டு 12 சதவீதமும், அதற்கு முந்தைய ஆண்டு 10 சதவீதமும் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தேசிய மருந்து விலை நிர்ணய ஆணைய வட்டாரங்கள் கூறுகையில், ‘பொதுவாக மக்கள் பயன்படுத்தும் வலி நிவாரணி, நுண்ணுயிர் எதிர்ப்பிகள், தொற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் என 800 அத்தியாவசிய மருந்துகளின் விலையை ஏப்ரல் 1ம் தேதி முதல் உயர்த்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. மொத்த விற்பனை விலைக் குறியீட்டின் வருடாந்திர மாற்றத்திற்கு ஏற்ப, அத்தியாவசிய மருந்துகளின் தேசியப் பட்டியலின் கீழ், அத்தியாவசிய மருந்துகளின் விலையை 0.0055% அதிகரிக்க ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Trending News

Latest News

You May Like