1. Home
  2. தமிழ்நாடு

ஓரு கிலோ 2300 ரூபாய் குறைந்தது..!

1

சர்வதேச பொருளாதாரம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களால தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த திங்கட்கிழமை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 352 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.53,328-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 632 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,960-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.53,800-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.20 ரூபாய் குறைந்து ரூ.6,725-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று தங்கம் விலை அதிகரித்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.2.30 குறைந்து ஒரு கிராம் ரூ.96.20க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.96,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Trending News

Latest News

You May Like