இன்று நடைபெறவிருந்த குடியரசு தலைவரின் திருவாரூர் பயணம் ரத்து..!
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழகம் வந்துள்ளார். உதகையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர், திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் இன்று மாலை 3 மணிக்கு நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மோசமான வானிலை காரணமாக குடியரசுத் தலைவரின் திருவாரூர் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 2 நாட்களாக அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 2,500-க்கும் மேற்பட்ட போலீஸார் திருப்பி அனுப்பப்பட்டனர்.