சட்டம் ஒழுங்கை சீர்படுத்த மே.வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துங்க..!
மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில், ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 9ம் தேதி 31 வயது பயிற்சி பெண் டாக்டர், பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இச்சம்பவத்தை கண்டித்தும், முதல்வர் மம்தா பானர்ஜி பதவி விலகக்கோரியும் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் எதிர்க்கட்சியினர், டாக்டர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்துபவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர், கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் போராட்டம் வன்முறையாக மாறியது.
இச்சம்பவத்திற்கு பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், மேற்குவங்க பா.ஜ., தலைவர் சுவேந்து அதிகாரி, ”மாணவர்கள் மீது தடியடி நடத்தியதற்கு முதல்வர் மம்தா பானர்ஜியே பொறுப்பேற்க வேண்டும். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை சீர்படுத்த ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்,” என வலியுறுத்தியுள்ளார்.