1. Home
  2. தமிழ்நாடு

ஜனாதிபதிக்கு இது முதல் தீவு பயணம் : வரும் 19-ம் தேதி செல்கிறார்..!

1

 5 நாள் பயணமாக வருகிற 19-ம் தேதி ஜனாதிபதி திரௌபதி முர்மு அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு செல்ல உள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு இது அவருடைய முதல் தீவு பயணமாகும். 

வருகிற 19-ம் தேதி பிற்பகல் ஒரு மணியாளவில் போர்ட் பிளேயரில் உள்ள ஐ.என்.எஸ். உட்க்ரோஷில்  ஜனாதிபதியை அந்தமான் நிகோபார் தளபதி, ஏர் மார்ஷல் சாஜீ பாலகிருஷ்ணன் மற்றும் சில மூத்த அதிகாரிகள் ஆகியோர் வரவேற்கின்றனர்.

5 நாள் பயணத்தில் ஜனாதிபதி அந்தமானில் உள்ள செல்லுலார் சிறை, ஹேவ்லாக் தீவுகள், கேம்ப்பெல் விரிகுடா ஆகிய தீவுகளுக்குச் சென்று பல்வேறு சமூகங்கள் மற்றும் அதிகாரிகளுடன் உரையாடுகிறார். 

அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் குறிப்பாக பாதிக்கப்படக் கூடிய பழங்குடியினர் குழுக்கள் பற்றிய திரைப்பட விளக்கக் காட்சியை பார்வையிடுகிறார். மேலும் பழங்குடி சமூகத்தினருடனும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையாடுகிறார். ஜனாதிபதி வருகையை முன்னிட்டு அந்தமான் நிகோபார் தீவுகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

Trending News

Latest News

You May Like