1. Home
  2. தமிழ்நாடு

காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற கோயிலில் குடியரசுத் தலைவர் முர்மு சாமி தரிசனம்..!

1

காஷ்மீருக்கு 2 நாள் பயணமாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஸ்ரீநகர் வந்தார். காஷ்மீர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். ஜம்முவில் ரியாசி மாவட்டம் காத்ரா நகரில் உள்ள புகழ் பெற்ற வைஷ்ணவி தேவி கோயிலுக்கு முர்மு நேற்று சென்றார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அங்கு குடியரசு தலைவர் முர்மு, வைஷ்ணவி தேவியை வழிபாடு நடத்தி சிறப்பு பூஜைகள் செய்தார். பின்னர், கோயிலில் பக்தர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள பார்வதி பவன் என்ற மிகப் பெரிய அறையையும் குடியரசுத் தலைவர் திறந்துவைத்தார்.

Trending News

Latest News

You May Like