1. Home
  2. தமிழ்நாடு

நாளை மறுநாள் தமிழகம் வருகிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு..!

Q

நாளை மறுநாள் ஜனாதிபதி திரவுபதி முர்மு தமிழகம் வருகிறார். திருவாரூரில் உள்ள மத்திய பல்கலையின், 10-வது பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்க உள்ளார். இவ்விழாவில், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குவதுடன், படிப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு தங்க பதக்கங்களையும் முர்மு வழங்க உள்ளார். டெல்லியில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டரில், திருவாரூர் மத்திய பல்கலை செல்கிறார்.முன்னதாக, ஸ்ரீரங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதனை தொடர்ந்து செப்.2ம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் சிட்டி யூனியன் வங்கி 120ஆவது ஆண்டு விழாவில் ஜனாதிபதி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு, அங்கிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். 

Trending News

Latest News

You May Like