1. Home
  2. தமிழ்நாடு

ஜனாதிபதி திரவுபதி முர்மு நிர்மலா சீதாராமன் சந்திப்பு..!

W

பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனாதிபதி உரையுடன் நேற்று(ஜன.31) துவங்கியது. அப்போது லோக்சபா மற்றும் ராஜ்யசபா கூட்டு கூட்டத்தில், ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். இந்நிலையில், இன்று (பிப்.,01) முற்பகல்11 மணிக்கு பார்லிமென்டில் 2025-26ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.

மத்தியில் பா.ஜ., தலைமையிலான அரசின் ஆட்சியில் 3வது முறையாக தாக்கல் செய்யும் முழு பட்ஜெட் இதுவாகும். தொடர்ந்து 8வது முறையாக பார்லிமென்டில் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். அதற்காக பட்ஜெட் ஆவணங்களுடன் மத்திய நிதியமைச்சகம் வந்தார்.

பின்னர் அவர் டில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் பட்ஜெட் ஆவணங்களுடன் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து பேசினார்.

Trending News

Latest News

You May Like