இன்று ஐதராபாத் வருகிறார் ஜனாதிபதி திரௌபதி முர்மு..!
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கலாச்சார பிரிவு சார்பில் பிரஜ்னா பிரவாக் என்ற பெயரில் 4 நாட்கள் மாநாடு நடைபெறுகிறது. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தலைமையில் நடைபெறும் மாநாட்டை திரௌபதி முர்மு தொடங்கி வைத்து பேசுகிறார். ஜனாதிபதி வருகையை முன்னிட்டு ஐதராபாத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.