1. Home
  2. தமிழ்நாடு

மோடியின் ராஜினாமா கடிதத்தை ஏற்றார் ஜனாதிபதி..!

1

பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி 296 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் பாரதிய ஜனதா மட்டும் 240 இடங்களை கைப்பற்றியுள்ளது. எனவே மத்தியில்   பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைகிறது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று அவரது இல்லத்தில் நடைபெற்றது. அப்போது புதிய அமைச்சரவை பதவியேற்க ஏதுவாக 17-வது மக்களவையை கலைக்க பரித்துரைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்த பிரதமர் மோடி தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி, காபந்து பிரதமராக தொடரும்படி கேட்டுக் கொண்டார். 

Trending News

Latest News

You May Like