1. Home
  2. தமிழ்நாடு

மாற்றத்திற்கு உங்களை தயார்படுத்தி கொள்ளுங்கள்... கமல் ஹாசன் சொன்ன அரசியல் கணக்கு!

1

சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் மநீம ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் கட்சியினர் மத்தியில் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன், எங்களின் பணி கடைசி வாக்காளன் இருக்கும் வரை தொடரும். எந்த ஓட்டிற்காக தனது உயிர் போகும் வரை பெரியார் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்.

யாருடைய ஓட்டிற்காக? தனக்கு வேண்டும் என்பதற்காகவா? எனக்கு எப்படி காந்தியாரை பிடிக்குமோ, அதே அளவிற்கு பெரியாரை பிடிக்கும். இதில் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். சினிமாவில் இருந்து என்னுடனேயே அரசியலுக்கு வந்தவர்கள் இருக்கிறார்கள். என் அனுபவத்தில் நான் புரிந்து கொண்டது ரசிகர்கள் வேறு. வாக்காளர்கள் வேறு. தற்போது இக்கட்டான சூழலில் இருக்கிறோம் என்று சொல்ல மாட்டேன்.

இதற்கு முன்பே இப்படியான நெருக்கடிகளை தமிழர்கள் பார்த்து விட்டார்கள். இந்திக்கு எதிராக போராடியவர்கள் நரைத்த தாடியுடன் இங்கே இந்த கூட்டத்தில் நின்று கொண்டிருக்கக் கூடும். மொழிக்காக உயிரையே விட்டவர்கள் இருக்கிறார்கள். எந்த மொழி வேண்டும், வேண்டாம் என்பதை முடிவு செய்யும் அறிவு தமிழனுக்கு உண்டு. இந்த ஆண்டு நமது குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கப் போகிறது.

அடுத்த ஆண்டு உங்கள் குரல் தமிழக சட்டமன்றத்தில் ஒலிக்கப் போகிறது. அதற்கு கட்டியம் கூறும் விழா தான் இது. மய்யத்தில் மாணவர்கள் இணைந்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு அர்த்தம் என்ன? மாணவர்கள் நம்முடன் இணைந்து விட்டால் நான் சொன்ன நாளை நமதேவிற்கு அர்த்தம் புரியும். மாற்றத்திற்கு உங்களை தயார்படுத்தி கொள்ளுங்கள். நான் 20 ஆண்டுகளுக்கு முன்பே அரசியலுக்கு வந்திருக்க வேண்டும்.

அடுத்த ஆண்டு சட்டமன்றத்தில் நமது குரல் ஒலிக்கப் போகிறது என்றால் அது வெறும் பேச்சாக போய் விடக் கூடாது. உங்களின் பலத்தை காட்ட வேண்டும். தீவிர உழைப்பை போட வேண்டும் என்று கமல் ஹாசன் கேட்டுக் கொண்டார். இதன்மூலம் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக உடன் கூட்டணி வைத்து சில இடங்களை கேட்டு பெறுவதற்கு வாய்ப்பிருப்பது தெரிய வருகிறது.

Trending News

Latest News

You May Like