1. Home
  2. தமிழ்நாடு

நடிகர் பிரேம்ஜி இந்து ஜோடியின் முதல் புகைப்படம் வெளியானது..!

1

முரட்டு சிங்கிள் என்று கூறிக்கொண்டு கோலிவுட்டில் நீண்ட காலங்களாக சிங்கிளாகவே திரிந்து வந்த பிரேம்ஜி, தற்போது திருமண பந்தத்தில் இணையவுள்ளார். நாளைய தினம் பிரேம்ஜியின் திருமணம் இந்து என்பவருடன் நடக்க உள்ளது. திருத்தணி முருகன் கோயிலில் மிகவும் எளிமையான முறையில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் சூழ இந்த திருமணம் நாளை காலை நடக்க உள்ளது. இதுகுறித்து கடந்த சில தினங்களுக்கு முன்னதாக இயக்குனரும் பிரேம்ஜியின் அண்ணனுமான வெங்கட் பிரபு தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த திருமணம் மிகவும் எளிமையாக நெருங்கிய சொந்தங்கள் சூழ நடக்க உள்ளதாகவும் விரைவில் நடக்க உள்ள ரிசப்ஷனில் சந்திப்போம் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், பிரேம்ஜி மற்றும் இந்து ஜோடியின் புகைப்படத்தை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் நடிகர் வைபவ் வெளியிட்டுள்ளார். இந்த ஜோடி பொருத்தத்தை ரசிகர்கள் பாராட்டியதுடன் வாழ்த்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.இதை பார்த்த ரசிகர்கள் பிரேம்ஜிக்கு திருமண களை வந்துள்ளதாக தொடர்ந்து பாராட்டு தெரிவித்து வாழ்த்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like