1. Home
  2. தமிழ்நாடு

விபத்தில் சிக்கிய பிரேமலு பட நடிகர்..!

1

கேரளா கொச்சியில் ஆஷிக் உஸ்மான் தயாரிப்பில் ப்ரோமன்ஸ் திரைப்படம் உருவாகி வருகிறது. 

இந்நிலையில், கொச்சியில் இன்று (ஜூலை 27) அதிகாலை 1.30 மணியளவில் எம்.ஜி. சாலையில் கார் ஓட்டும் காட்சி படமாக்கப்பட்ட போது, கட்டுப்பாட்டை இழந்த கார் வேறொரு கார் மீது மோதியதில், காரினுள் இருந்த மலையாள நடிகர் அர்ஜூன் அசோகன், பிரேமலு பட நடிகர் சங்கீத் பிரதாப், மேத்யூ தாமஸ் மற்றும் ஸ்டண்ட் மாஸ்டர் காயமடைந்துள்ளனர்.

1

அதுமட்டுமின்றி, உணவு டெலிவரி செய்யும் ஒருவரின் பைக்கின் மீது மோதியதால், அவரும் காயமடைந்தார்.இதனைத் தொடர்ந்து, தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, எவ்வித முன்னேற்பாடுகளும் இன்றி படப்பிடிப்பு நடத்தியதாகக் கூறி, படக்குழுவினர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து, படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டது

Trending News

Latest News

You May Like