1. Home
  2. தமிழ்நாடு

பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து பிரேமலதா உருக்கமாக கடிதம்..!!

Q

கேப்டன் விஜயகாந்த் மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். மேலும், அவரது இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். விஜயகாந்த் உடலுக்கு ரஜினி, கமல், விஜய், இளையராஜா என பல்வேறு திரைப் பிரபலங்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், விஜயகாந்துடனான நினைவுகளை பகிர்ந்து பேசிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கடிதம் எழுதியுள்ளார். அதில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, விஜயகாந்துடனான நினைவுகளை பகிர்ந்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், அரசியல் எல்லையை கடந்து விஜயகாந்த் பிரதமர் மோடி இடையே நட்புறவு இருந்தது என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.


 


 

Trending News

Latest News

You May Like