அதிமுக - பாஜக கூட்டணி குறித்து பிரேமலதா விஜயகாந்த் ரியாக்ஷன் இதுதான்..!

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிமுக - பாஜக கூட்டணி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்திடம் அதிமுக - பாஜக கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அதிமுக - பாஜக கூட்டணி குறித்து டிவியில் பார்த்து தெரிந்து கொண்டதாகவும் இந்த கூட்டணி குறித்து தாங்கள் சொல்வதற்கு எதுவும் இல்லை என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
அடுத்த ஆறு மாதங்களுக்கு தேமுதிகவை வலுப்படுத்தும் பணி மட்டுமே மேற்கொள்ளப்படும் எனவும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். தேமுதிகவின் ஒவ்வொரு அடியும் வளர்ச்சியை நோக்கியே இருக்கும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் கூறினார். தேர்தல் கூட்டணி தொடர்பாக நிதானமாக யோசித்து தேமுதிக முடிவு எடுக்கும் எனவும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து யாரிடமும் எதுவும் பேசவில்லை எனவும் பேசிய பிறகு அதிகாரப்பூர்வமாக தெரிவிப்போம் என்றும் கூறினார். ஏப்ரல் 30ஆம் தேதி தேமுதிக பொதுக்குழுவில் பல அறிவிப்புகள் இருக்கும் எனவும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். மேலுடம பாஜக தலைவராக பொறுப்பேற்கும் நயினார் நாகேந்திரனுக்கு தேமுதிக சார்பில் வாழ்த்துக்களையும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக, அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொண்டது. 5 இடங்களில் போட்டியிட்ட தேமுதிக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இந்நிலையில் ராஜ்யசபா சீட் தொடர்பாக அதிமுக -தேமுதிக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. அதிமுகவுக்காகதான் பாஜகவை பகைத்துக் கொண்டு தேமுதிக அவர்களுடன் கூட்டணி வைத்தது. 2026 சட்டமன்றத் தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் என்றும் அறிவித்தது. ஆனால் தற்போது அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளதாகல் தேமுதிக அடுத்து என்ன செய்யும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.