1. Home
  2. தமிழ்நாடு

விஜய் அரசியலில் ஒவ்வொரு அடியையும் யோசித்து எடுத்து வைக்கனும் - பிரேமலதா விஜயகாந்த்..!

1

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியிருப்பதாவது,

விஜய் எங்கள் குடும்பத்தில் ஒருவராக தான் வந்து சந்தித்தார். அரசியல் காரணமாக எங்களை வந்து சந்திக்கவில்லை. கோட் திரைப்படத்தில் முறைப்படி விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்தி இருக்கிறார்கள். இதற்காக திரைப்படக் குழுவுடன் வந்து நன்றி தெரிவித்தார்கள். விஜய் அரசியலில் ஒவ்வொரு அடியையும் யோசித்து எடுத்து வைக்கனும்.

கோட் படத்தில் விஜயகாந்த் வரும் இடம் பிரமாண்டமாக இருக்கும் என விஜய் தெரிவித்தார் என்றார். வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படம் ‘ தி கோட்’. வரும் செப்டம்பர் 5-ம் தேதி படம் திரைக்கு வருகிறது. இந்தப் படத்தில் மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த்தை ‘ஏஐ’ தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தியுள்ளதாக தகவல் வெளியானது.

மேலும், இதனை டிரைலர் வெளியீட்டு விழாவில் படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபுவும் உறுதி செய்திருந்தார். இதனிடையே சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் பிரேமலதா விஜயகாந்தை நடிகர் விஜய் அண்மையில் நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, இயக்குநர் வெங்கட்பிரபு மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர். ‘தி கோட்’ படத்தில் விஜயகாந்தை பயன்படுத்தியதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடிகர் விஜய், பிரேமலதாவை சந்தித்ததாக தகவல் வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like