1. Home
  2. தமிழ்நாடு

பத்ம பூஷன் விருதுடன் சென்னை திரும்பிய பிரேமலதா விஜயகாந்த்..! |

1

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் 132 பேருக்கு அறிவிக்கப்பட்டன. கடந்த ஜனவரியில் விருது பட்டியல் வெளியிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 22-ம் தேதி முதல்கட்டமாக முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியம், நடிகர் மிதுன் சக்ரவர்த்தி, பாடகி உஷா உதூப் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.

இந்நிலையில், 2-ம் கட்டமாக பத்ம விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது. இந்த விழாவில், மறைந்தநடிகர் விஜயகாந்துக்கு வழங்கப்பட்ட பத்ம பூஷண் விருதை அவரது மனைவியும், தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த், குடி யரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.ஜனாதிபதி திரெளபதி முர்முவின் கையில் இருந்து விருதை பெற்றவுடன் பிரேமலதா விஜயகாந்த் மேல்நோக்கி பார்த்து லேசாக உணர்ச்சி வசப்பட்டார். விஜயகாந்த் மறைந்த நிலையில் மத்திய அரசு தந்த பத்ம பூஷன் விருதை அவருக்கு சமர்ப்பிக்கும் வகையில் பிரேமலதா விஜயகாந்த் மேல்நோக்கி பார்த்தார்.

இந்த விழாவில் நடிகர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் மற்றும் பிரேமலதா விஜயகாந்தின் தம்பி சுதீஷ் உள்ளிட்டவர்கள் பங்கேற்று இருந்தவர். பிரேமலதா விருது வாங்கியபோது அவர்கள் கைத்தட்டினர். இந்த வீடியோ தற்போது வெளியாகி இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது விஜயகாந்த் ரசிகர்களை கலங்க வைத்துள்ளது. இந்த பத்ம விருது வழங்கும் விழாவில் துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில் சென்னை திரும்பிய பிரேமலதா விஜயகாந்திற்கு தேமுதிக தொண்டர்கள் பலத்த வரவேற்பு கொடுத்தனர். தொண்டர்களின் அன்பையும் பாசத்தையும் பார்த்து நெகிழ்த பிரேமலதா  பத்மபூஷண் விருதை உயர்த்தி காண்பித்தார்.. மலர்களை தூவி "கேப்டன் கேப்டன்" என கத்திய தொண்டர்கள்.. வாகனத்தின் மேல் நின்று வெற்றிக்குறி காட்டிய படி வந்தார். 

Trending News

Latest News

You May Like