1. Home
  2. தமிழ்நாடு

கேப்டன் விஜயகாந்தின் ட்விட்டர் கணக்கின் பெயரை திடீரென மாற்றிய பிரேமலதா!

1

நுரையீரல் தொடர்பான பிரச்சனையால் கடுமையாக பாதிக்கப்பட்ட நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இதைத்தொடர்ந்து திரைப்பிரபலங்கள் பலரும் அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று அவருக்கு அஞ்சலி செலுத்தினர். இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ளாத பல திரை நட்சத்திரங்களும், நடிகர் நடிகைகள் மற்றும் இயக்குநர்கள் தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் தற்போது தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் எக்ஸ் வலைதள பக்கத்தின் கணக்கை, விஜயகாந்தின் மனைவியும், தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் தனது பெயருக்கு மாற்றியுள்ளார். இதுவரை விஜயகாந்த் என்ற பெயரில் இயங்கி வந்த அந்த கணக்கு தற்போது பிரேமலதா விஜயகாந்த் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விஜயகாந்த் மறைவை தொடர்ந்து இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

1

Trending News

Latest News

You May Like