1. Home
  2. தமிழ்நாடு

தண்ணீரில் தத்தளித்த கர்ப்பிணியை.. JCBயில் மீட்ட அமைச்சர் வேலு.. கையெடுத்து கும்பிட்ட தாய்..!

1

தென் மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது மழை ஓய்ந்துள்ள நிலையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் தூத்துக்குடியில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக கூடுதல் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை நியமித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் பொன்னையா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சாத்தான்குளம், காயல்பட்டினம் பகுதிகளுக்கு வணிகவரித் துறை அமைச்சர் பி. மூர்த்தி மற்றும் பதிவுத் துறைத் தலைவர் தினேஷ் ஆலிவர் பொன்ராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளுக்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா. கார்த்திகேயன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாநகராட்சியை சுற்றியுள்ள பகுதிகளுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் மற்றும் மாநகர போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் ஆல்பி ஜான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் கூடுதலாக சிறப்பு முயற்சிகள் செயலாக்கத் துறை செயலாளர் டாக்டர் தாரேஷ் அகமது மற்றும் சிப்காட் மேலாண்மை இயக்குநர் டாக்டர் கே. செந்தில்ராஜ் ஆகியோர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுடன் இணைந்து மீட்பு, நிவாரணப் பணிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குவதை ஒருங்கிணைத்து மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், ஜேசிபி மூலம் வீடு, வீடாகச் சென்று உணவு பொருட்களை வழங்கிய அமைச்சர் எ.வ.வேலு.அதே போல் இடுப்பளவு தண்ணீரில் தத்தளித்த கர்ப்பிணியை.. JCBயில் சென்று மீட்ட அமைச்சர் வேலு.. கையெடுத்து கும்பிட்ட தாய் 


 

Trending News

Latest News

You May Like