1. Home
  2. தமிழ்நாடு

ஓடும் ரயிலில் கர்பிணிக்கு நடந்த கொடூரம்! ஹேமந்த்ராஜ் குற்றவாளி என அறிவிப்பு..!

1

ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த 35 வயதான பெண் ஒருவர் கணவருடன் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் தங்கி வேலைபார்த்து வந்தார். 4 மாத கர்ப்பம் ஆக இருந்த போது கடந்த பிப்.,06ம் தேதி கோவையில் இருந்து திருப்பதி செல்லும் இன்டெர்சிட்டி ரயிலில் பொதுப்பெட்டியில் பயணித்துள்ளார்.

ரயில், திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்ப்பேட்டை வந்தபோது, அந்த பெண் மட்டும் பெட்டியில் இருந்துள்ளார். அப்போது அந்தப் பெட்டியில் ஏறிய கே.வி.குப்பம் பகுதியை சேர்ந்த ஹேமந்த்ராஜ் என்பவன், கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன், கடுமையாக தாக்கி ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டான். அதில் படுகாயம் அடைந்த அந்த பெண், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
 

சம்பவம் தொடர்பாக 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பிவு செய்த போலீசார் ஹேமந்த் ராஜை கைது செய்து சியைில் அடைத்தனர். இவன் மீதான வழக்கு திருப்பத்தூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.விசாரணை முடிந்த நிலையில், ஹேமந்த்ராஜ் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது. அவனுக்கான தண்டனை விவரம், வரும் திங்கட்கிழமை( ஜூலை 14) அறிவிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like