1. Home
  2. தமிழ்நாடு

2வது மனைவி கர்ப்பம்... முதல் மனைவியுடன் மாதம்பட்டி ரங்கராஜ்..!

1

கோவை மாதம்பட்டி ரங்காஜ் சமையல் கலைஞரான இவர், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக உலகம் முழுவதும் பிரபலமானார்.மெஹந்தி சர்க்கஸ் உள்ளிட்ட படங்களில் நடிக்கவும் செய்துள்ளார். 

மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவி ஸ்ருதியை பிரிந்த நிலையில் 2ஆவதாக ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டாவை கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். கிரிசில்டா 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் சொல்லப்பட்டது.இந்த நிலையில் தான், அவர் தனது முதல் மனைவி ஸ்ருதி உடன் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் ரங்கராஜுக்கும் தனக்கும் திருமணம் முடிந்ததாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா புகைப்படங்கள் பகிர்ந்த நிலையில், ரங்கராஜ் ஸ்ருதியுடன் இன்று நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே கோவையைச் சேர்ந்த ஸ்ருதி என்ற பெண்ணுடன் திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கும் நிலையில் விவாகரத்து கூட செய்யாமல் 2ஆவது திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து ரங்கராஜ் எந்த பதிவும் போடவில்லை. ஆனால், ஜாய் கிரிசில்டா தனது திருமண புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதில் என்ன ஆச்சரியம் என்றால் இருவரும் ஒருவருக்கொருவர் அருகருகில் அமர்ந்திருந்தது தான் இப்போது பூகம்பமாக வெடித்துள்ளது. இதில் இருவரும் ஒருவருக்கொருவர் முகம் கொடுத்து கூட பேசிக் கொள்ளவில்லையாம். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending News

Latest News

You May Like