14 வயதில் கர்ப்பம்.. திருமணத்திற்கு மறுத்த சிறுமியின் தலையை துண்டித்த தந்தை !

உத்தரபிரதேச மாநிலம் சிதௌலி பகுதியில் உள்ள துல்காபுர் கிராமத்தில் 14 வயது சிறுமி ஒருவர் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். அச்சிறுமி திருமணத்திற்கு முன்பு கர்ப்பமடைந்த நிலையில், அதனை பெற்றோரிடம் கூறாமல் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், 6 மாத கர்ப்பமானதால் சிறுமி கர்ப்பமானதை உறுதி செய் தந்தை அவரிடம் விசாரித்துள்ளார். அப்போது சிறுமியின் தந்தையுடன் மூத்த சகோதரனும் தொடர்ந்து கேட்டிருக்கிறார். யாதையும் காதல் செய்திருந்தால் கூறி பேசி திருமணத்திற்கு ஏற்பாடு செய்யலாம் எனவும் பேசினர்.
ஆனால் தனது கர்ப்பத்திற்கு காரணமானவர் யார் என்பது பற்றி எதுவும் சொல்லாமல் தொடர்ந்து மவுனமாக இருந்திருக்கிறார்.
இதனால் ஆத்திரமடைந்த தந்தை மகளை தாக்கி கழுத்தை நெறித்தப்போது மூச்சுதிணறி உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண்ணின் தந்தை கொலையை மறைக்க முடிவு செய்தார்.
அதன்படி தந்தையும், மகனும் சேர்ந்து அந்தப் பெண்ணின் தலையை துண்டித்து, அங்கிருந்த சாக்கடைக்கு அருகில் மறைத்து வைத்திருக்கிறார்.
ஆனால் உடல் வெளியே தெரிந்த நிலையில் அதனை கண்ட மக்கள் போலீசாருக்கு தகவல் கூறினர். விரைந்து வந்த போலீசார் தலை மற்றும் உடலை மீட்ட நிலையில் அந்த பெண்ணின் தந்தையிடம் பேசியப்போது அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
அவரை கைது செய்த போலீசார் கொலைக்கு உடந்தையாக இருந்த அந்த பெண்ணின் சகோதரனை தேடி வருகின்றனர்.
newstm.in