1. Home
  2. தமிழ்நாடு

விஜய்யுடன் ஒரே மேடையில் பிரஷாந்த் கிஷோர்.. எங்கு... எப்போ..? தெரியுமா ?

1

 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்குப் பணியாற்றிய பிரசாந்த் கிஷோர், 2026இல் தவெகவுக்குப் பணியாற்றுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அண்மையில் தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா அதற்கான பணிகளை முன்னெடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தவெக நிகழ்ச்சியில் பிரசாந்த் கிஷோர் கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக வெற்றிக் கழகத்தின் ஆண்டு விழா செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில்  நாளை பிப்.26இல் நடைபெறவுள்ளது. இதையொட்டி கட்சியின் பொதுக்குழுக் கூட்டமும் நடைபெறவுள்ளது. தனியாா் சொகுசு விடுதியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் 2,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட உள்ளதாகவும் தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக மாவட்ட வாரியாக குறிப்பிட்ட நபா்களுக்கு மட்டுமே அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளதாகம் கூறப்படுகிறது.

Trending News

Latest News

You May Like