தவெக ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர் பங்கேற்பு..!

தமிழகத்திற்கு சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் ஏற்கனவே உள்ள திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளில் மாற்றமில்லை என்று அதன் தலைவர்கள் கூறி வருகின்றனர். அதேசமயம் இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்கும் வகையில் அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்க அக்கட்சியின் பொதுச்செயலாளர் தற்போதில் இருந்தே காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. அதன்படி தமிழக வெற்றிக் கழகத்தை அதிமுக கூட்டணிக்குள் கொண்டுவருவதற்காக பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.
இந்த நிலையில், இதுவரை 2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக எந்த கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும். விஜய் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைப்போம் என்று த.வெ.க தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.
இந்நிலையில் தவெக ஆண்டு விழா நிகழ்ச்சியை நாளை மறுதினம் நடத்த ஏற்பாடு செய்ய்யப்பட்டுள்ள நிலையில் தவெக நிகழ்ச்சியில் முதல்முறையாக கலந்துகொள்கிறார் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர்;