1. Home
  2. தமிழ்நாடு

பிரஜ்வல் ரேவண்ணா தோல்வி..!

1

முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரனும், கர்நாடகா மாநிலம் ஹசன் தொகுதி மக்களவை உறுப்பினராக இருப்பவர் பிரஜ்வல் ரேவண்ணா. மக்களவைத் தேர்தலில் அவர் ஹசனில் அவர் பாஜக கூட்டணியோடு இணைந்து தேர்தலில் போட்டியிடுகிறார். தேர்தல் முடிந்த நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா(33)‘ இவர் பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சுமார் 3 ஆயிரம் ஆபாச‌ வீடியோக்கள் கடந்த ஏப்ரல் 26-ம் தேதி வெளியாயின.

இதுதொடர்பாக அவர் மீது சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார்4 வழக்குகள் பதிவு செய்தனர். அவர் ஜெர்மனிக்குத் தப்பியோடிய நிலையில் ஒரு மாதத்துக்கு பின்னர்கடந்த மாதம் 31-ம் தேதி சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் அவரை கைது செய்தனர். வரும் 6-ம்தேதி வரை போலீஸார் பிரஜ்வலை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலையில் இருந்து நடைபெற்று வருகிறது. இதில் பாலியல் புகாருக்கு உள்ளான பிரஜ்வல் ரேவண்ணா காங்கிரஸ் வேட்பாளர் ஷ்ரேயாஸ் படேலை விட அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார்.

இந்நிலையில் மதியம் முதல் இந்த சூழல் அப்படியே மாறியது. அவர் போட்டியிட்ட ஹாசன் தொகுதியில் பின்னடைவை சந்தித்தார்.இறுதியில் அவர் காங்கிரஸ் கட்சி வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார்..!

SHREYAS. M. PATEL (Winner)
Votes: 672988 (+ 42649)
Party: Indian National Congress

PRAJWAL REVANNA (Lost)
Votes: 630339 ( -42649)
Party: Janata Dal (Secular)  

Trending News

Latest News

You May Like