1. Home
  2. தமிழ்நாடு

உடனடியாக கூலி உயர்வை அமல்படுத்தாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் - விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம்..!

1

கடந்த ஏப்ரல் மாதம் 20-ம் தேதி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது விசைத்தறியாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க முடிவு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஆனால் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டது போல ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலி உயர்வை வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து சோமனூரில் நடைபெற்ற அவசர பொதுக்குழு கூட்டத்தில், கூலி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுபற்றி பேசிய விசைத்தறி உரிமையாளர் சங்கத் தலைவர் பூபதி, உடனடியாக கூலி உயர்வை அமல்படுத்தாவிட்டால் அடுத்த கட்டப் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

Trending News

Latest News

You May Like