மழைநீர் குறைந்த பின்பே மின்விநியோகம் செய்யப்படும் : மின்சார வாரியம்..!
மின்சார வாரியம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சென்னையில் தேங்கி உள்ள மழைநீர் குறைந்தால் மட்டுமே மின்விநியோகம் செய்யப்படும். திநகர், கோடம்பாக்கம், ஓஎம்ஆர் சாலைகளில் மின்சார பெட்டி வரை தேங்கி இருக்கும் மழைநீரின் அளவு குறைந்ததும் மின்சாரம் விநியோகம் துவங்கும்.
எங்கு எல்லாம் தண்ணீர் வடிகிறதோ அங்கு எல்லாம் உடனே மின்சாரம் கொடுக்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
#CycloneFengal | புயல் மழையில் மின் வாரியம்.
— TANGEDCO Official (@TANGEDCO_Offcl) November 30, 2024
புயல் கற்றால் மின் கம்பத்தின் மீது விழுந்த மரத்தை JCB உதவியுடன் அகற்றும் பணியில் மின் வாரியம் தீவிரம்.#TANGEDCOWithYou | #TANGEDCO | #TNEB | #ChennaiRain pic.twitter.com/BExP8YumcX