தவெக தலைவர் விஜய்யை எதிர்த்து தேர்தலில் போட்டியிடுவேன் – பவர் ஸ்டார் சீனிவாசன்..!

“தவெக தலைவர் விஜய் எந்த தொகுதியில் நின்றாலும் அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன்” என நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பேட்டி அளித்துள்ளார்.எந்த கட்சி அழைத்தாலும் விஜய்யை எதிர்த்து நிற்பேன்.
தொடர்ந்து பேசிய அவர் : “முதலில் விஜய்யை களத்திற்கு வரச்சொல்லுங்கள். மேடையில் பேசுவது எல்லாம் பஞ்ச் டயலாக், மக்களை சந்தித்து பிரசாரம் செய்யுங்கள். வசனம் பேசாதீர்கள். எனக்கும் ரசிகர்கள் உள்ளார்கள். எனக்கும் கூட்டம் கூடும்” என நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பேட்டி அளித்துள்ளார்.
ஜோசப் விஜய் அவர்களே.. நான் உங்களை ரொம்ப மதிக்கிறேன். உங்களை கூடப்பிறந்த தம்பி மாதிரிதான் ஆடியோ வெளியீடு நிகழ்ச்சியில் சந்தித்தேன். நாம இரண்டு பேரும் அரை மணி நேரம் தனியாக பேசினோம். அப்போ நீங்க சொன்னீங்க.. எனக்கு உலகம் முழுவதும் ஃபேன்ஸ் இருக்காங்க.. ஆனால் எங்க வீட்டில் என் பையன் உங்களோட ஃபேன் என்று சந்தோஷப்பட்டீங்க.. நானும் ஹேப்பியா இருந்தேன். ரொம்ப அமைதியாக இருந்தவர் திடீர்னு பார்த்தால் மேடையில் பயங்கரமான டயலாக்.. வசனம் எல்லாம் பேசுகிறார். களத்திற்கு வாங்க.. அப்போதுதான் வெற்றி தோல்வியை தீர்மானிக்க முடியும். வீரபாண்டிய கட்ட பொம்மன் மாதிரி டயலாக் பேசுகிறார். கூட்டம் எனக்கு கூடத்தான் கூடுது.. கூட்டத்தை வச்சி எதையுமே கணிக்க முடியாது. எனக்கும் ரசிகர்கள் ஏகப்பட்ட பேர் இருந்தாங்க..
கட்சி ஆரம்பிக்கனும் என்று தீவிரமாக முயற்சி எடுத்தேன். கடைசியில் என்ன சூழ்நிலையோ தள்ளி போய்விட்டது. அதனால என்னுடைய அருமை தம்பி விஜய் எந்த தொகுதியில் நின்றாலும் அவரை எதிர்த்துநிற்க தயாராக இருக்கிறேன். அவர் தயாரா என்று கேட்டு சொல்லுங்க.. கட்சி ஆரம்பிக்க மாட்டேன். பெரிய கட்சி கூப்பிட்டால் போவேன்.
இல்ல என்றால் சுயேட்சையாகவும் நிற்க தயார். திமுகவில் சேர வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக சேருவேன். திமுகவை எதிரி என்று சொல்வது எல்லாம் டயலாக் சொல்வதுதான். இதல்லாம் பெரிய விஷயம் இல்லை. அவர் மக்களுக்கு என்ன செய்ய போகிறார்.கொள்கை என்ன அதை சொல்லாமல், நான் அவருக்கு எதிரி என்று சொல்லக் கூடாது.
இதெல்லாம் தப்பு.. அவர்கள் எல்லாம் 50 வருட அனுபவம் உள்ளவர்கள். அவர்களுடைய அனுபவம் இவருடைய வயது. அதனால் எடுத்தோம் கவிழ்த்தோம் என மேடையில் கூட்டம் இருக்கிறது என்பதற்காக பேசக் கூடாது. முதல்வரை விஜய் பேசுவதை பார்த்து வேதனை பட்டேன். என்னடா..ஒருநடிகராக இருந்து இப்படி எல்லாம் பேசலமா.. முதலில் அவர் நடிகர் டெக்னிஷியனுக்கு உதவி பண்ணட்டும். அதை விட்டுட்டு மக்களுக்கு அதை செய்கிறேன் என்று சொல்கிறார். களத்தில் இறங்கி அவர் வேலை பார்க்க வேண்டும். விஜய் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு கொடுப்பார்கள். எனது ரசிகர்கள் எனக்கு ஆதரவு கொடுப்பார்கள். கூட்டத்தை பார்த்து எதையுமே கணிக்க முடியாது. அரசியல் வேறு, வாக்காளர்கள் வேறு.. எனக்கு விஜய்க்கு மேல கூட்டம் இருந்தது. விஜய் களத்தில் நின்று ஜெயிக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை. இவ்வாறு அவர் கூறினார்.