இன்று இந்த பகுதிகளில் மின்தடை அறிவிப்பு! ஏரியாக்கள் லிஸ்ட் இதோ!

அக்டோபர் 30-ந் தேதி புதன்கிழமை அன்று தமிழகம் முழுவதும் ஒரு சில பகுதிகளில் முழுநேர மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பை மின்சார வாரியம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-
கும்மிடிப்பூண்டி மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் செல்லும் பகுதிகளான GPD சிப்காட் பகுதி, மதர்பாக்கம் புறவழிச்சாலை, புதுப்பேட்டை, G.R.கண்டிகை, புதிய GPD பகுதி, பாலயோகி நகர், எல்லையம்மன் நகர், பாலகிருஷ்ணாபுரம், S.P.பேட்டை, ஐயர் கண்டிகை, SR கண்டிகை, NR கண்டிகை, GR கண்டிகை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார தடையானது செய்யப்படும்.
தமிழ்நாட்டில் தீபாவளி காலத்தில் மின்சார தடை ஏற்படக்கூடாது என மின்வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.அதனால் தீபாவளி சீசன் தொடங்கியுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்குமாறு TANGEDCO தனது அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, TANGEDCO மாநிலம் முழுவதும் பராமரிப்புப் பணிகளை முன்னதாக மேற்கொண்டுள்ளது.அவசர நிலையைத் தவிர, மின்சார வழங்கலை நிறுத்தக்கூடாது என கள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதன் காரணமாக, தமிழ்நாட்டில் தீபாவளி அன்று எங்கும் மின்சார தடை இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.