இன்று அறிவிக்கப்பட்ட மின் தடை ஒத்திவைப்பு..!
இன்று கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. காலை 9 மணிக்கு மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். ஆனால் அவ்வாறு அறிவிக்கப்பட்டபடி நடைபெறாமல் மின் விநியோகம் தொடர்ந்து வழங்கப்பட்டுவருகிறது.
நிர்வாக காரணங்களால் இன்று நிகழவிருந்த மின் தடை ரத்து ஆகி இருக்கலாம் எனவும், இதற்கு முன்பு 2024 டிசம்பர் 23 தேதியில் தான் மின் தடை பீளமேடு துணை மின் நிலையத்தில் நடைபெற்றுள்ளதால் இன்று நடைபெறவிருந்த மின் தடை வேறு ஒரு நாளில் நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.