Power Cut: சென்னையில் இன்று (டிச.30) முக்கிய இடங்களில் மின்தடை!

சென்னையில் இன்று (டிச.30) பராமரிப்புப் பணி காரணமாக பல்வேறு முக்கிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. எங்கெங்கு மின்விநியோகம் நிறுத்தம் என பார்க்கலாம்.
தாம்பரம்/ஐ.ஏ.எப் பகுதி: சுந்தரேஸ்வரர் கோயில் தெரு, திருவள்ளுவர் தெரு, சக்கரவர்த்தி தெரு, நம்மாழ்வார் தெரு, வியாசர் தெரு கடப்பேரி பகுதி: எஸ்.பி.ஐ காலணி. கஜலட்சுமி நகர், கமலா தெரு, எம்.ஜி.ஆர் நகர், என்.எஸ்.ஆர் ரோடு, குமரன்குன்றம் பகுதி மற்றம் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
பல்லாவரம் பகுதி: இராணுவ குடியிருப்பு, தாஜ் ஃபிளைட் கிச்சன், பி,பி,சி,எல், எல் & டி மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம்
ராயப்பேட்டைபகுதி : பீட்டர்ஸ் ரோடு, மேற்கு காட் ரோடு மற்றும் பெருமாள் முதலி தெரு.
மாதவரம் பகுதி: அன்னபூர்ணா நகர், வி.பி.சி நகர், முனுசாமி நகர், சாஸ்திரி நகர், ஐயப்பா நகர் மற்றும் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
ஆவடி/திருமுல்லைவாயல்: சிவசங்கரபுரம், ஜாக் நகர், தென்றல் நகர், பத்மாவதி நகர், மூர்த்தி நகர்.
செங்குன்றம் பகுதி: அழிஞ்சிவாக்கம் பஞ்சாயத்து, செல்வ விநாயக நகர், விலாங்காட்டுபாக்கம் பஞ்சாயத்து முழுவதும், கோமதியம்மன் நகர் முழுவதும், பாலவாயல் முழுவதும், சோத்துபாக்கம் கிராமம் முழுவதும், செங்குன்றம் மார்க்கெட் பகுதி முழுவதும் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். காலை 9 மணி என்பது அலுவலகம் செல்லவும் வீட்டில் சமையல் முடிவுக்கவும் முக்கிய நேரமாகும். இதனால் 9 மணிக்கு முன்பே மின்சாரம் சார்ந்த அத்தியாவசியப் பணிகளை முடித்துகொள்வது சிறந்தது.
newstm.in