Power Cut: சென்னையில் இன்று (ஜன.6) முக்கிய பகுதிகளில் மின்தடை !

சென்னையில் இன்று (வியாழன்கிழமை) பராமரிப்புப் பணிகள் காரணமாக பல்வேறு முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. எந்தந்த இடங்களில் மின்விநியோகம் நிறுத்தம் என பார்க்கலாம்,
பெரம்பூர் பகுதி: ஜெய்பீம் நகர் 1வது தெரு.
ஆவடி/வடக்கு பகுதி: முருகப்பா பாலிடெக்னிக், திருமுல்லைவாயல் காவல் நிலையம், பி.எஸ்.என்.எல் – சி.டி.எச் சாலை, எச்.வி.எப் சாலை, ஆவடி பஸ் டெப்போ, செக் போஸ்ட், என்.எம் சாலை, நந்தவன் மேட்டுர், கஸ்தூரி பாய் நகர்.
கீழ்பாக்கம் பகுதி: கீழ்பாக்கம் கார்டன் விரிவு, கே.எச் ரோடு, தாகூர் நகர், அயனாவரம், அண்ணா நகர் ஒ மற்றும் எல் பிளாக், நியூ கொளத்தூர் துணைமின் நிலையம் பகுதி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்,
மாத்தூர் பகுதி: சின்ன மாத்தூர், எம்.எம்.டி.ஏ 1வது மற்றும் 2வது மெயின் ரோடு பகுதி, ஓமகுலம் தெரு, சக்தி நகர் மற்றும் நேரு நகர், பெருமாள் கோயில் தெரு மற்றும் டெலிகாம் நகர், அச்சிஸ் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். இதனிடையே, இன்று பணி நாள் என்பதால் மின்விநியோகம் நிறுத்தப்படும் 9 மணிக்கு முன்பே, மின் பணி சார்ந்த அன்றாட தேவைகளை முடித்துக்கொள்வது நல்லது.
newstm.in