1. Home
  2. தமிழ்நாடு

தமிழி எழுத்துடன் கூடிய பானை ஓடு கண்டெடுப்பு..!

1

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்ற அகழாய்வு மூலம் 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய நகர நாகரிகம் இருப்பது கண்டறியப்பட்டது. ஏற்கெனவே 9 கட்ட அகழாய்வு பணிகள் மூலம் பல ஆயிரம் தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்நிலையில் 10-ம் கட்ட அகழாய்வு பணியை ஜூன் 18-ம் தேதி கீழடி, கொந்தகை ஆகிய 2 இடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தபடியே காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து கீழடியில் 2 குழிகள் தோட்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 'தா' என்ற தமிழி எழுத்துடன் கூடிய பானை ஓடு கண்டெடுக்கப்பட்டது. மேலும் அந்த எழுத்துக்கு அடுத்துள்ள எழுத்து இருக்க கூடிய பானை ஓடும் கிடைக்க வாய்ப்புள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்தனர். முன்னதாக நடைபெற்ற அகழாய்வில் பல வண்ணங்களில் கண்ணாடி மணிகள் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like