1. Home
  2. தமிழ்நாடு

மறு உத்தரவு வரும் வரை 'நெக்ஸ்ட்' தேர்வு ஒத்திவைப்பு..!

1

எம்பிபிஎஸ் (இளநிலை மருத்துவப் படிப்பு) இறுதி ஆண்டு மாணவா்களுக்கு 'முதுநிலை நீட்' தேர்வு நடத்தப்பட்டு வந்த நிலையில் அதற்கு மாற்றாக ‘நேஷனல் எக்ஸிட் டெஸ்ட் (நெக்ஸ்ட்)’ என்ற பெயரில் தேர்வு நடத்தப்படும் என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்தது. 

ஆண்டுக்கு இருமுறை இந்த தேர்வுகள் நடத்தப்படும் என்று கூறப்பட்டதுடன் 2019 பேட்ச் மாணவர்களுக்கு 'நெக்ஸ்ட்' தேர்வு வருகிற ஜூலை 28 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்தத் தேர்வுக்கு நாடு முழுவதும் உள்ள மருத்துவ மாணவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.  இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தில் இருந்து மறு உத்தரவு வரும் வரை 'நெக்ஸ்ட்' தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. நெக்ஸ்ட் தேர்வை கைவிடக்கோரி பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like