1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தில் தேர்வுகள் ஒத்திவைப்பு.. அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

தமிழகத்தில் தேர்வுகள் ஒத்திவைப்பு.. அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!


தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு ஆகியவை அமல்படுத்தப்பட்டுள்ளது. பாதிப்பு அதிகரித்து வருவதால் மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளது.

இந்நிலையில், மாணவர்களின் நலன் கருதி தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

கல்லூரிகளில் செய்முறை தேர்வுகள் மட்டும் நடைபெறும் என்றும், பல்கலைக்கழக தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பது குறித்து தேர்வு தேதிக்கு ஒரு வாரத்துக்கு முன்பு அறிவிக்கப்படும். என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் கூறினார்.

அத்துடன், எந்தக் கல்லூரியிலும் நேரடி வகுப்புகள் நடத்தப்படவில்லை. ஒருவேளை நேரடி வகுப்புகள் நடத்தப்படுவது தெரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போதுள்ள விடுமுறையை பயன்படுத்தி மாணவர்கள் தேர்வுக்கு தயாராக அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like