எய்ம்ஸ் விடுதியில் முதுநிலை மருத்துவ மாணவர் தற்கொலை..!
பாட்னா எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் முதுநிலை மருத்துவ படிப்பில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார் ஒடிசாவை சேர்ந்த அம்ரித்யா அரவிந்த்.
இந்நிலையில், சம்பவத்தன்று அந்த மாணவர் தனது அறையின் உள்ளே சென்று கதவை பூட்டி கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால், அவருடைய நண்பர்கள் சந்தேகமடைந்து எய்ம்ஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.இதுபற்றிய தகவல் போலீசாருக்கு கொடுக்கப்பட்டது
"இறந்தவர் காலையிலிருந்து விடுதி எண் 5 இல் உள்ள தனது அறையைத் திறக்கவில்லை என்று போலீசாருக்கு ஒரு அழைப்பு வந்தது. அவரது அறை உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்தது. போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர், மற்ற நிர்வாக அதிகாரிகளும் அழைக்கப்பட்டனர், அவர்கள் மதியம் 1 மணியளவில் அறைக்குள் நுழைந்தனர். இறந்தவர் படுக்கையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
சம்பவ இடத்தில் தற்கொலைக் குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை. உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது, மேலும் சம்பவத்திற்கான சரியான காரணத்தை அதன் அறிக்கையிலிருந்து மட்டுமே அறிய முடியும் என எதிர்பார்க்க படுகிறது