1. Home
  2. தமிழ்நாடு

சென்னை முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு!

1

நடிகை விஜயலட்சுமி நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தை சீமான் நாடினார். ஆனால் பாலியல் வழக்கை ரத்து செய்ய முடியாது என  உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. அத்துடன்  12 வாரத்திற்குள் வழக்கை முடித்து குற்ற பத்திரிகை தாக்கல் செய்யவும்  வளசரவாக்கம் காவல் துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

சீமான் விஜயலட்சுமி


இந்த வழக்கில் சீமான் அடுத்தடுத்து பேசும் கருத்துக்கள் சர்ச்சையாக மாறி வருகிறது. அதாவது முன்னதாக விஜயலட்சுமி யார் என்று தனக்கு தெரியாது எனக் கூறிவந்தார்.   சில மாதங்கள் அவருக்கு 50,000 ரூபாய் பணம் கொடுத்ததாக கூறினார். பின்னர் மாதம் 30000 கொடுத்து தன்னை சின்ன வீடாக வைத்துக் கொள்ளும்படி  ஜயலட்சுமி தன்னிடம் கூறியதாகவும் அவர் ஒரு பாலியல் தொழிலாளி எனவும் சீமான் கூறினார். அதோடு வயசுக்கு வந்து குச்சியில் இருக்கிற புள்ளையை தூக்கிட்டு போய் சோளக்காட்டில் வைத்து கற்பழித்து விட்ட மாதிரி  கதறிட்டு இருக்கீங்க என கூறினார்.  விஜயலட்சுமி தானாக விரும்பி வந்து தான் தன்னுடன் உறவு வைத்ததாகவும் கட்டாயப்படுத்தினால் தான் அது பாலியல் வன்புணர்வு என்றும் விரும்பி வைத்தால் அந்த உறவு பெயர் வேறு எனவும் கூறினார்.

சீமான் விஜயலட்சுமி
6 மாதங்கள்  மட்டும்தான் அந்த நடிகையுடன் பழகியதாகவும் திருமணம் செய்து கொள்வதாக எந்த வாக்குறுதியும் தான் கொடுக்கவில்லை எனவும் சீமான் அடுத்தடுத்து வாக்குமூலம் கொடுப்பது போல் இந்த பிரச்சனையில் பேசி வருகிறார். இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சீமானுக்கு எதிர்ப்பு தெரிவித்து  திராவிட பெரியார் கழகம் சார்பில் சென்னையின் பல்வேறு இடங்களில்  போஸ்டர் ஒட்டப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த போஸ்டரில்  தமிழ்நாடு அரசே காவல்துறையே பாலியல் குற்றவாளி சீமானை தப்ப விடாதே. உதவி கேட்டு வந்த பெண்ணை ஏமாற்றி வன்புணர்ந்து ஏழு முறை கருக்கலைப்பு செய்த பாலியல் குற்றவாளி சீமானை கடுமையான சட்டத்தில் கைது செய் சிறையில் அடை என எழுதப்பட்டுள்ளது. மேலும் இந்த போஸ்டர் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like