1. Home
  2. தமிழ்நாடு

ஆளுநர் ரவியை கண்டித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் ..!

Q

ஆளுநர் உரையைப் படிக்காமல் ஆர்.என்.ரவி நேற்று சட்டசபையில் இருந்து வெளியேறிய நிலையில் இன்று சென்னையில் பல்வேறு பகுதிகளில் ஆளுநரை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ஒரே நாள் இரவில் சென்னையில் ஆளுநர் மற்றும் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து கெட் அவுட் ரவி என்ற ஹேஷ் டேக்குடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
தமிழக சட்டமன்றத்தின் பின்னணியில் ஆளுநரும் எடப்பாடி பழனிச்சாமியும் பேசிக் கொள்வது போலவும், அண்ணாமலை ஒளிந்து இருந்து பார்ப்பது போலவும் அந்த போஸ்டர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
“ தமிழ்நாட்டில் அத்துமீரும் ஆளுநர்.. அவரை காப்பாற்றும் அதிமுக பாஜக கள்ளக் கூட்டணி” என்றும், “சார் நான் கோஷம் போடுற மாதிரி போடுறேன்.. நீங்க நேக்கா வெளியே போயிடுங்க” என எடப்பாடி பழனிச்சாமி சொல்வது போலவும், 'சூப்பர்யா நீதாயா உண்மையான விசுவாசி” என ஆளுநர் சொல்வது போலவும் வடிவமைக்கப்பட்டு இருக்கும் அந்த போஸ்டர்கள் சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டு உள்ளது. 
சென்னையின் சைதாப்பேட்டை, கிண்டி, நுங்கம்பாக்கம் என பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டு இருப்பது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Trending News

Latest News

You May Like