கோவையில் வைரலாகும் போஸ்டர்..! டாஸ்மாக் கடைகள் முன் அண்ணாமலை சவுக்கால் அடித்து கொண்ட போஸ்டர்..!

கோவையில் அண்ணாமலைக்கு எதிராக திமுகவினர் டாஸ்மாக் கடை முன்பு ஒட்டிய போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மார்ச் 6ம் தேதி முதல் 3 நாட்கள் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டது.இந்த சோதனை பற்றி அமலாக்கத்துறை சார்பில் தமிழ்நாடு டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி வரை முறைகேடுகள் நடந்திருப்பதாக அமலாக்கத் துறை அறிவித்தது.
இந்நிலையில் தான் முதல்வர் ஸ்டாலின் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக 2 நாட்களுக்கு முன்பு தமிழக பாஜக சார்பில் சென்னையில் உள்ள டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. போராட்டத்துக்கு குவிந்த பாஜகவினரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
மேலும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளின் முன்பும் முதல்வர் ஸ்டாலின் போட்டோ மாட்டி வைக்கப்படும் என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். அதன்படி இன்று தென்காசி மாவட்டத்தில் உள்ள சில டாஸ்மாக் கடைகளின் முன்பு பாஜகவை சேர்ந்த பெண் நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலின் போட்டோவை வைத்தனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தான் பாஜகவினருக்கு எதிராக திமுகவினர் போஸ்டர் ஒட்ட தொடங்கி உள்ளனர். கோவையில் திமுகவினர் நூதன போஸ்டரை ஒட்டினர். அதாவது டாஸ்மாக்கில் முதல்வர் ஸ்டாலின் போட்டோவை வைப்பதாக கூறிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக இந்த போஸ்டரை ஒட்டி உள்ளனர். டாஸ்மாக்கில் அரசு நிர்ணயித்த காசை விட கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பது இல்லை என்ற வகையில் போஸ்டர் என்பது ஒட்டப்பட்டுள்ளது.
போஸ்டரில் அண்ணாமலை சவுக்கால் தன்னை தானே அடித்து கொண்ட போட்டோ இடம்பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி ‛‛சங்கிகளின் கவனத்துக்கு.. இந்த கடையில் தமிழக அரசு நிர்ணயம் செய்த விலையை விட கூடுதல் விலைக்கு மதுவகைகள் விற்கப்படுவதில்லை'' என்று எழுதப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகள் முன்பு அண்ணாமலையை கிண்டல் செய்து போஸ்டர் 🤣#கோமாளி_அண்ணாமலை pic.twitter.com/bgBwBZUO8Y
— 💥கார்த்திக் சுப்புராஜ்💥 (@Natuviral007) March 19, 2025